நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

ஜாகர்த்தா:

இந்தோனேஷியாவில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை நேற்று இரவில் இருந்து 3 முறைக்கு மேல் வெடித்துள்ள நிலையில் அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. 

பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் எரிமலை, புவியியல் ஆபத்து தணிப்பு மைய அதிகாரி ஹெருனிங்டியாஸ்,

எரிமலை குழம்பின் வெளியேற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இரண்டாவது உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.

சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset