நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்:

உக்ரைனுக்கு கூடுதலாக அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணையான பேட்ரியாட்டை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சல் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:
உக்ரைனுக்கு 600 கோடி டாலர் ராணுவ உதவி அளிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ் கூடுதலாக பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள மிகப் பெரிய பாதுகாப்பு உதவி இது என்றார்.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வான்பாதுகாப்புத் தளவாடங்களில் பயன்படுத்துவதற்காக இந்த பேட்ரியாட் ஏவுகணைகள் அனுப்பபடவுள்ளன.

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளிப்பதால் போரின் கடுமைதான் அதிகரிக்குமே தவிர அமைதி ஏற்படாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset