நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் முடிந்து விட்டதால் தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கோடை வெயிலுக்கு இதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) திடீரென அமீரகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழையும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.

அமீரகத்தின் தேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, துபாயில் உள்ள அல் குத்ரா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கனமழை பெய்துள்ளது. 

மேலும் கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதாக NCM தெரிவித்துள்ளது. அதேபோன்று அல் குத்ரா சாலையில் உம் சுகீம் நோக்கி பயணித்த வாகன ஓட்டிகளும் தூசிப் புயல் வீசிய வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். 

அல் குத்ரா பகுதியைத் தவிர, எமிரேட்ஸ் சாலையில் ஜெபல் அலி மற்றும் சைஹ் அல் சலேம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் நேற்று மாலையில் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோக்களையும் அமீரகத்தின் புயல் மையம் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதே போல் அல் அய்னில், வெப்பமான வெப்பநிலைக்கு மத்தியில் ஆலங்கட்டி மழையும் நேற்று பெய்துள்ளது. புயல் மையத்தால் பகிரப்பட்ட அந்த வீடியோக்கள் அல் அய்ன் சிட்டியின் வடக்கே அல் ஷுவைப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதைக் காட்டுகிறது.

https://twitter.com/i/status/1784552026254295280

ஆதாரம்: கலீஜ் டைம்ஸ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset