நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்

டல்லாஸ்:

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலில் கொல்லப்படும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது கொலம்பியா (Colombia)
பல்கலைக் கழகம்.

பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கூடாரங்களை அமைத்துள்ளனர்.

கூடாரங்களைக் காலி செய்ய மறுக்கும் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று கோரிக்கைகளைக் கொலம்பியா பல்கலைக்கழகம் முன்வைத்துள்ளது.

அந்தக் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினர்.

இஸ்ரேலிய ராணுவத்துக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களிலிருந்து விலகியிருப்பது, பல்கலைக்கழகத்தின் நிதி விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருப்பது, போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குடுவது என்பது மாணவர்களின் அந்த மூன்று கோரிக்கைகள்.

ஆதாரம் : வாஷிங்டன் போஸ்ட்

தொடர்புடைய செய்திகள்

+ - reset