நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க்:

ரஷிய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை வழங்கினால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சீனாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிளிங்கன் கூறுகையில், போதை மருந்து கடத்தலைத் தடுப்பது, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை புதுப்பிப்பது போன்ற விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது.

ரஷியாவின் ஆயுத உற்பத்தியை மேம்படுத்துவற்குத் தேவையான இயந்திரக் கருவிகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்வது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகிறது.

சீன கருவிகளும் சாதனங்களும் உக்ரைனை தாக்க ரஷியாவுக்கு  உதவுகின்றன. இதனால் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக உள்ளன என்றார் பிளிங்கன்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset