நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

பிரிட்டன்: 

பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி மிக  அரிதாகச் சிலருக்கு ஓரிரு பக்க விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து மீண்டு வர தடுப்பூசி முக்கியக் காரணமாக இருந்தது.இருப்பினும், சில அரிய நிகழ்வுகளில் கோவிட்-19 தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. 

இதற்கிடையே பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி குறித்து நீதிமன்றத்தில் முக்கிய அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதற்காக  அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தான் தடுப்பூசியை உருவாக்கியிருந்தது.

இதையே தான் இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்திருந்தது.

அஸ்டாரஜெனெகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

51 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்த ஜேமி ஸ்காட் என்பவர் தான் ஏப்ரல் 2021-ஆம் ஆண்டில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் இதனால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக வழக்கு தொடர்ந்தார். இதனால் தனது வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். 

இதற்கிடையில் அஸ்ட்ராஜெனெகா முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்தது.

இருப்பினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் ஒன்றில் கோவிஷீல்ட் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. 

TTS (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) என்பது ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படும். 

மேலும், அவை ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையையும் குறைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. 

பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில்,  தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு துல்லியமான காரணம் தெரியவில்லை. 

அதேநேரம் இந்த டிடிஎஸ் பாதிப்பு தடுப்பூசியால் தான் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இல்லை. 

தடுப்பூசி இல்லாமல் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.

அஸ்ட்ராஜெனெகா அளித்துள்ள இந்த விளக்கம் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா இந்த விளக்கத்தை அளித்துள்ள நிலையில், இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset