நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய்  கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு 

துபாய்:

கடந்த ஏப்ரல் 16 அன்று கடுமையான வானிலை அமீரகத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஆதரவளிக்கும் வகையில் துபாய் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில், துபாய் பொருளாதாரம், சுற்றுலாத் துறையின் (DET) துணை நிறுவனமான சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான முஹம்மது பின் ரஷீத் நிறுவனம் (Dubai SME), சமீபத்தில் நாட்டை புரட்டிப் போட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியை அறிவித்துள்ளது.

இந்த முயற்சியானது புதிய வட்டியில்லா கடன்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME கள்) வைத்திருக்கும் எமிராட்டியர்களுக்கு தற்போதுள்ள கடன்களுக்கான சலுகை மற்றும் ஒத்திவைப்பு காலங்கள் மூலம் நிதி ஆதரவை வழங்குகிறது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, துபாய் SME உறுப்பினர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகையானது, தகுதியுடைய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 300,000 திர்ஹம்ஸ் வட்டியில்லா கடன்களைப் பெறுவதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை அவகாசம் அளித்து அந்தந்த வணிகங்களின் சீரான செயல்பாட்டிற்குத் தேவையான சேதமடைந்த சொத்துக்களை சரிசெய்ய அல்லது மாற்றுவதற்கு அனுமதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், புதிய முன்முயற்சியானது பொருள் சேதங்களுக்கு வட்டியில்லா வணிகக் கடன்களை வழங்குவதுடன் துபாய் SME உறுப்பினர்களாக இருக்கும் பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வணிக உரிமையாளர்களின் நிதிச் சுமையைத் தணிக்கவும், பழுதுபார்ப்பு மற்றும் மாற்றுச் செயல்பாடுகளின் செலவுகளை ஈடுகட்டவும், முடிந்தவரை விரைவாக வணிகத்தைத் தொடங்கவும், வழக்கமான செயல்பாடுகளுக்கு விரைவாக திரும்பவும் உதவுகிறது.

<p>எனவே, பாதிக்கப்பட்ட துபாய் SME உறுப்பினர்கள், SME இணையதளம், http://www.thefund.ae க்கு முஹம்மது பின் ரஷித் நிதி மூலம் நிதியின் நியமிக்கப்பட்ட நிவாரண நிதிக் குழுவிடம் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் அல்லது 600 555 559 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம்: கலீஜ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset