நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனம் அனைத்து விமானச் சேவைகளையும் ரத்துச் செய்தது: பயணிகள் தவிப்பு

சிட்னி: 

ஆஸ்திரேலியாவின் ஆகப் புதிய மலிவுக் கட்டண விமான நிறுவனம் Bonza, திடீரென்று அதன் அனைத்து விமானச் சேவைகளையும் ரத்துச் செய்தது.

அதனால் நாடு முழுதும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

நிதிப் பிரச்சினைகளால் Bonza நிறுவனத்தின் நிர்வாகம் வேறொரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Bonza நிறுவனம் சென்ற ஆண்டு (2023) விமானச் சேவைகளை வழங்கத் தொடங்கியது.

சேவைகளைத் திடீரென்று ரத்துச் செய்ததற்குப் பயணிகளிடம் அது மன்னிப்புக் கேட்டது.

Bonzaவின் எட்டு Boeing 737 Max ரக விமானங்களைக் கடன்தாரர்கள் கைப்பற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆதாரம்: மீடியா கோர்ப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset