நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்

பெய்ஜிங்:

டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்குப் பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்குச் சென்றுள்ளார்.

அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது, கடல் கடந்து தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாகச் சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். 

சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாகச் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகின்றது.

சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset