நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் கேந்திரத்திற்கு ஸம்ரி, ஸ்டீவன் சிம் தலைமையேற்பர்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு  சட்டமன்றத் தொகுதியைக் காக்கும் நோக்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் கேந்திரத்தை இரண்டு மூத்த தலைவர்கள் வழிநடத்த உள்ளனர்.

தேசிய முன்னணி  பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் தேர்தல் கேந்திரத்திற்கு தலைமையேற்கவுள்ளார்.

அவருக்கு ஜசெக துணைச் செயலாளர் ஸ்டீவன் சிம் துணையாக செயல்படவுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகக் கூட்டம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஸம்ரி, ஸ்டீவன் சிம் ஆகியோரின் நியமனம் உறுதி செய்யப்பட்டது என்று செயலகத்தின் தலைவர் அஸ்ரஃப் வஜ்டி டுசுகி கூறினார்.

மத, இன, சமூகத்தின் நல்வாழ்வு, நல்லிணக்கத்திற்கான அடிப்படையாக அரசியல் நிலை, மிதமான அணுகுமுறையை தொடர்ந்து பாதுகாக்க ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

மேலும் நிலைத் தன்மையாக அரசியலை அணுகுமுறையுடன் ஒற்றுமை அரசாங்கம் மக்களை செழுமையாக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்த முடியும்.

குறிப்பாக வாழ்க்கைச் செலவைக் கையாள்வது, மக்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உத்தரவாதம் செய்தல், நாட்டின் பொருளாதாரத்தின் வலுப்படுத்துவது அனைத்து கட்சிகள் உறுதிக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset