நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்

சிப்பாங்: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ-வின் கார்கோ மையத்தில் பொட்டலம் மீது வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான வாசகத்தை எழுதியதை ஒப்புக் கொண்ட கிடங்கு பணியாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 வெள்ளி அபராதமும் நான்கு நாள் சிறைத்தண்டனையும் விதித்தது.

தனக்கு எதிராக குற்றச்சாட்டை 23 வயதான முஹம்மத் ரசாலி ரஹிம் என்ற அப்பணியாளர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முஹம்மத் புக்கோரி முஹம்மத் ருஸ்லான் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 11.42 மணியளவில் கார்கோ மையத்தின் ஸ்கேன் இயந்திரப் பகுதியில் பொட்டலம் ஒன்றின் மீது வெடிகுண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான வாசகத்தை எழுதியதாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் ஈராண்டுச் சிறை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் ரசாலி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

கேஎல்ஐஏ கார்கோ மையத்தின் ஸ்கேன் இயந்திரப் பகுதியில் வெடிகுண்டு தொடர்பான அச்சுறுத்தல் பெறப்பட்டது தொடர்பில் தாங்கள் புகார் பெற்றுள்ளதாக கேஎல்ஐஏ மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் முன்னதாகக் கூறியிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset