நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு சிலாங்கூரின் 5 தோட்ட மக்கள் பிரச்சினைக்கு எடுத்தவுடனே  தீர்வு காண முடியாது: பாப்பாராயுடு 

கெர்லிங்:உலு சிலாங்கூரில் உள்ள 5 தோட்ட மக்கள் பிரச்சினைக்கு எடுத்தவுடனே தீர்வு காண முடியாது.

ஆகையால் அப் பகுதி மக்கள் மூன்றாம் தரப்பினரை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

உலு சிலாங்கூரில் உள்ள லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நிகல் கார்டென், லாடாங் மின்யாக், லாடாங் புக்கிட் திங்கி ஆகிய தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக அம் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நான் ஆட்சிக் குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இந்தப் பிரச்சினையில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

குறிப்பாக பெர்ஜாயா குழுமத்திற்கு கடிதம் எழுதி அது தொடர்பான ஆவணங்களையும் பெற்றுள்ளேன்.

பெர்ஜாயா கொடுத்த ஆவணங்களில் 69 பேருக்கு நிலம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அத் தோட்ட மக்களின் பிரதிநிதியான அகிலன் 244 பேருக்கான ஆவணங்களை வைத்துள்ளார். இந்தப் பெயர் பட்டியலை முதலில் ஒன்றிணைக்க வேண்டும். 

அதே வேளையில் வீடமைப்பு ஊராட்சி அமைச்சுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அங்கிருந்து பதில் கிடைக்க வேண்டும். அதன் பின்தான் இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.  

ஆகவே அத் தோட்ட மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.  மூன்றாம் தரப்பினரின் பேச்சைக் கேட்டு தவறான முடிவை எடுக்கக்கூடாது என்று பாப்பாராயுடு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset