நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புறக்கணிக்கலாம்:  அதற்காக பொது சொத்துகளை சேதப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது: பெர்லிஸ் முஃப்தி கண்டனம் 

கங்கார்:

காஸா போருக்கு மத்தியில் சில சின்னங்களை புறக்கணிப்பதற்கான நடவடிக்கை சரியானது என்று கொண்டாலும் ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்துவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பெர்லிஸ் முஃப்தி முஹம்மத் அஸ்ரி ஜைனுல் ஆபிடின் கண்டித்துள்ளார். 

நியாயமான காரணமின்றி மற்றவர்களின் சொத்துக்களை சேதப்படுத்து அநாகரிகம்.

அதே வேளையில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல நிறுவனங்களுக்கு எதிரான தீங்கை சரிசெய்ய வேண்டும் என்று ஷரியா சட்டம் கட்டளையிடுகிறது.

பொது சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்துபவர்கள் பாவம் செய்ததாகக் கருதப்படுவார்கள் என இறைத்தூதர் முஹம்மது நபியின் வழிகாட்டுதலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மார்க்கத்திற்கு விரோதமில்லாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset