நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கோலாலம்பூர்:

கேசினோ பிரச்சனை தொடர்பாக எதிர்மறையான பதிவுகளை வெளியிட்ட
சேகு பார்ட் என்று அழைக்கப்படும் பெர்சாத்து தகவல் பிரிவு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது இன்று ஜொகூர் பாரு ஷெஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்நிலையில், அவர் தனக்கெதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். 

ஃபோரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மைதானத் திட்டம் தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை தனது முகநூலில் எரிச்சலூட்டும் பதிவுகளை அவர் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

45 வயதான செகு பார்ட், நீதிபதி ரசிதா ரோஸ்லி முன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் தான் குற்றமற்றவர் என்று ஒப்புக் கொண்டார்.

தேச நிந்தனை சட்டம் 1948 (சட்டம் 15) இன் 4(1)(c) இன் படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதே சட்டத்தின் துணைப்பிரிவு 4(1) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.

இது அதிகபட்சமாக 5,000 அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் வழி வகை செய்யும் சட்டமாகும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset