நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதனாக இருந்தால் நிலைப்பாடு வேண்டும்; தேர்தலை புறக்கணித்தால் பலவீனமான சமுதாயமாகி விடுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோல குபு பாரு:

தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையால் நாம் பலவீனமான சமுதாயமாகி விடுவோம்.

மனிதனாக இருந்தால் ஒரு  நிலைப்பாடு வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தற்போது அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் இந்தியர்கள் 18 சதவீத வாக்குகளை கொண்டுள்ளார்கள். இதனால் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பது இந்தியர்கள்தான் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் இந்தியர்கள் இத் தேர்தலில் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மத்தியிலும் மாநிலத்திலும் நம்பிக்கை கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. 

அதனால், இந்த தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் அது இங்குள்ள மக்களுக்கு தான் பயனை தரும்.

அதே வேளையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றர்.

ஒரு மனிதனுக்கு நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியம். ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்க வேண்டும்.

ஆகவே கோல குபு பாரு தொகுதி மக்கள் இவ்விவகாரத்தில் தீர்க்கமான முடிவை தீர்க்கமாக எடுக்க வேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையால் சமுதாயம் தான் பலவீனமாகும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset