நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மந்திரி பெசாரிடம் விசாரணை நிறைவடைந்தது

பெட்டாலிங் ஜெயா: 

பெர்லிஸ் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லி தடுத்து வைக்கப்படவில்லை. மாறாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசி-யின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தப் பின் அவர் இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்து ஷுக்ரி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுக்ரி இன்று காலை 9.50 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்ததை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம், 600,000 வெள்ளி உரிமைகோரல் ஆவணங்களைப் போலியாக தயாரித்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக எம்ஏசிசி கைது செய்த ஐந்து நபர்களில் சுக்ரியின் மகனும் அடங்குவர். அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை பெர்லிஸ் முழுவதும் பழுது பார்த்தல், பராமரித்தல், விநியோகம் மற்றும் சேவைகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் உள்ள ஆவணங்கள் பொய்யாக்கப்பட்டதை விசாரிப்பதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset