நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி சீரமைப்புக்கு மேலும் 20,000 ரிங்கிட்: கல்வி துணையமைச்சர் 

கோல குபு பாரு:

உலு சிலாங்கூர் கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி சீரமைப்புக்கு  மேலும்  20,000 ரிங்கிட் வழங்கப்படும்.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை அறிவித்தார்-

கோல குபு பாரு தமிழ்ப் பள்ளிக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ இன்று காலை சிறப்பு வருகை புரிந்தார்.

கல்வியமைச்சு கொடுத்த மானியம் முறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே தாமும் கல்வி அமைச்சும் ஒவ்வொரு பள்ளியிலும் பார்வையிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில் இன்று கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.

இந்தப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 70,000 ரிங்கிட் முறையாக பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்தை துணை கல்வியமைச்சர் வோங் கா வோ பாராட்டினார்.

இந்த ஆண்டு 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பள்ளியின் கதவுகள், இதர சீரமைப்பு பணிகளுக்கு உதவ கூடுதலாக 20,000 ரிங்கிட் ஒதுக்க முயற்சிகள்  முன்னெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை புரிந்த துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம்,  மாணவர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினார்.

பள்ளிக்கு வருகை புரிந்து உதவிகளை வழங்க முன் வந்திருக்கும் துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாக சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயமல்லிகா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset