நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வணிகத் தளங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு; வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை: கலைவாணர்

கோலாலம்பூர்:

வணிகத் தளங்களின் பெயர் பலகையில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர் கதையாகி உள்ளது.

இதன் அடிப்படையில் வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முயற்சிகள் தொடரும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் லிட்டல் இந்தியா போன்ற வணிகத் தளங்கள் உள்ளன.

இந்த வணிகத் தளங்களின் உள்ள கடைகள் இந்தியர்களுக்கு சொந்தமாகும். வாடிக்கையாளர்களும் இந்தியர்கள் தான்.

ஆனால் அக்கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

பெயர் பலகையில் தமிழ்மொழியை போடக் கூடாது என எந்தவொரு தடையும் இல்லை.

இருந்தாலும் கடைகளின் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆகவே வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இல்லாத கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை.

காரணம் அவர்களுக்கு குடும்பமும் தொழிலாளர்களும் உள்ளனர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட வணிகர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுவோம்.

இது தான் எங்களின் முயற்சி என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset