நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயா டிஸ்பர்சல் லிங்க் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம் ரத்துச் செய்யப்படும்: ஃபஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா டிஸ்பர்சல் லிங்க்  (பி.ஜே.டி.) இணைப்பு நெடுஞ்சாலைத்  கட்டுமானத் திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

11 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளைப் பங்குத்தாரர் பூர்த்தி செய்யத் தவறியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். 

இந்தக் கட்டுமானத் திட்டம் தொடர்பான விவாதங்களைத் தொடர வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளருமான ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித் துறை இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் அறிக்கைகளை வெளியிடும் என்று ஃபஹ்மி கூறினார்.

இத்திட்டத்தின் படி இந்த நெடுஞ்சாலை பெட்டாலிங் ஜெயாவின் வடக்கு மற்றும் தெற்கை நார்த் பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், தாமான் டத்தோ ஹருன், தாமான் மேடான் பாரு, தாமான் ஸ்ரீ மஞ்சா, பண்டார் கின்ராரா மற்றும் புக்கிட் ஜலீல் தொழில்நுட்ப பூங்கா வழியாக இணைக்கும்.

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset