நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோரியின் அடியில் சிக்கி முதியவர் மரணம்; அலோர் ஸ்டாரில் பயங்கர விபத்து 

அலோர் ஸ்டார்: 

டிரெய்லர் லோரி, மோட்டார் சைக்கிள் இடையே ஏற்பட்ட சாலை விபத்தில் தொடர்பாக மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட முதியவர் லோரியின் அடியில் சிக்கிய நிலையில் அவர் மரணமடைந்தார். 

இந்த விபத்து ஜாலான் கங்ஸா மெர்கோங்கில் நிகழ்ந்தது. காலை 10.04 மணிக்கு தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்த வேளையில் அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை குழு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தது. 

EX 5 ரக மோட்டாரும் லோரி டிரெய்லரும் மோதிக்கொண்டது. பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி லோரியின் சக்கர பகுதியில் மாட்டிக்கொண்டு அந்த லோரி அவரை இழுத்து சென்றதாக தீயணைப்பு மீட்புப்படை  கோமாண்டர் அஹ்மத் நோரஸ்லான் ஸாகாரியா கூறினார். 

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தார். உடற்கூறு ஆய்வுக்காக உடல் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset