நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட் வீழ்ச்சி; BNM ஐ வெறுமனே குற்றம் சொல்லக்கூடாது: மசீச தலைவர் வீ கா சியோங் 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு வெறுமனே BANK NEGARA MALAYSIA (BNM) குறை சொல்ல முடியாது என்று மசீச தேசிய தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார். 

ரிங்கிட்டின் மதிப்பு சரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் BANK NEGARA MALAYSIA வின் கவர்னரை மட்டுமே பதிலளிக்க சொல்வது என்பது ஏற்புடையதாக அமையாது என்று அவர் தெரிவித்தார். 

எதிர்கட்சியாக இருந்தபோது DAP, அரசாங்கத்திற்கு எதிராக இந்த ரிங்கிட் வீழ்ச்சி  தொடர்பாக கேள்விகளை கேட்டது. தற்போது அரசாங்கத்தில் இருக்கும் நிலையில் தேசிய முன்னணியை கேள்வி கேட்க முடியாமல் BNM கவர்னரை சாடுவது என்பது பொறுப்பற்ற தனமாகும் என்று வீ கா சியோங் விளக்கமளித்தார். 

முன்னதாக, ரிங்கிட் வீழ்ச்சி தொடர்பாக BNM கவர்னர் பதிலளிக்க வேண்டும் என்று DAP கட்சியின் தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டிருந்தார். 

அமெரிக்கா டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட் 4.77 விகிதமாக பதிவு செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset