நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி 

கோலாலம்பூர்:

அன்பும் அக்கறையும் தமக்கு வேண்டாம்; மாறாக நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார். 

எதிர்கட்சி தரப்புடன் எந்தவொரு பிணக்குகளும் இல்லை. இருப்பினும் நடப்பு அரசாங்கம் இந்தியர்களுக்கு சரிசமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று முன்னாள் பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வருமான அவர் தெரிவித்தார். 

மேலும், அரசு மற்றும் பொது துறைகளில் இந்தியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலும் இந்திய மாணவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை என்று இராமசாமி குற்றஞ்சாட்டினார். 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தை பேராசிரியர் டாக்டர் இராமசாமி தலைமையிலான உரிமை கட்சி முன்னெடுத்துள்ளது. 

முன்னதாக, நம்பிக்கை கூட்டணிக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று இராமசாமி கூறிய நிலையில் அவர் நம்பிக்கை கூட்டணி மீது அன்பும் அக்கறையும் கொள்ளவில்லை என்று தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset