நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்

கோலாலம்பூர்:

நம் நாட்டின் கல்வி முறையை விமர்சனம் செய்துள்ள உலக வங்கி அறிக்கையைக் கல்வி அமைச்சகம் விமர்சித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து, தற்போது நாட்டின் கல்வித் திட்டத்தை உருமாற்றம் செய்ய பல்வேறு முயற்சிகளைச்  செயல்படுத்தி வருவதாக  கல்வியமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

கல்வி திட்டத்தைச் சீரமைப்பதன் மூலம் மாணவர் இடைநிற்றல் பிரச்சனையை ஆரம்பத்திலிருந்தே தீர்க்க முடியும்.

ஆசிரியர்களின் இலக்கவியல் திறனைப் பூர்த்தி செய்ய கற்றல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்துவது உட்பட அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்குக் கவனம் செலுத்தப்பட்டது.

முன்னதாக, குறைந்த வளங்களைக் கொண்ட நாடான வியட்நாம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவின் கல்வி திட்டம் மிகவும் பின்தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset