நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்

ரியாத்:

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மது சல்மான், இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியாவுக்கு வருகை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு வெளியே சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான் பிரதமர்கள் உட்பட பல நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பு உரையாடலின் போது இந்த விருப்பத்தை அவர் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியாவிற்கு வருகைத் தர முயற்சிப்பதாக இளவரசர் முஹம்மது சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கான தேதி  இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மேலும் புத்ராஜெயா - ரியாத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், 

மலேசியாவில் பெரிய அளவிலான முதலீட்டில் சவூதி அரேபியா கவனம் செலுத்த வேண்டும் என்று இளவரசர் முஹம்மது சல்மானிடம் தாம் வலியுறுத்தியதாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset