நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி

கோல குபு பாரு:

உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி உடனடியாக தேசியக் கூட்டணியில் இணைய வேன்டும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை பரிந்துரைத்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அவர் அடிக்கடி வெளியிட்ட அறிக்கைகளின் காரணமாக, 

முன்னாள் ஜசெக தலைவரைப் பல தேசியக் கூட்டணி தலைவர்கள் விரும்புவார்கள் என்று அவர் நம்பியதே இதற்குக் காரணம்.

இந்த ராமசாமியிடம் அக்கறையும் அன்பும் இல்லை.

ஆகவே அவர் உடனடியாக தேசியக் கூட்டணியில் சேர முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், தேசியக் கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் அவரை நேசிப்பார்கள்.

கோல குபு பாருவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset