நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகா கட்சித் தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெறும்.

இதில்  உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா மத்திய செயலவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கட்சியின் தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டது.

இதில் தொகுதிகளின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் தேர்தல் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொகுதி பொறுப்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மே 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதன் தேர்தல் மே 17,18,19ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய பிரிவுகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறும்.

அதற்கான தேர்தல் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேசிய, மாநில பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜூம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இரண்டு வார பிரச்சாரத்திற்கு பின் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்னிடம் பல பேர் சொன்னாலும், அது அவர்களின் முடிவு. அவர்களை யாராலும் தடுக்க முடியாது.

தேர்தலில் போட்டி இருப்பது அவசியம். அதற்காக பொழுதுபோக்கிற்காக யாரும் போட்டி போட வேண்டாம்.

உண்மையிலேயே வேலை செய்ய வேண்டும் எண்ணத்துடன் போட்டியில் களமிறங்க வேண்டும்.

அதே வேளையில் இம்முறை தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset