நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல கங்சார் சைவ பரிபாலன சபா பதிவு ரத்து விவகாரம்: விரைவில் தீர்வுக் காணப்படும்

ஈப்போ:

சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக  செயல்பட்டு வரும் கோல கங்சார் சைவ பரிபாலன சபா பதிவு  ரத்து செய்யப்பட்ட விவகாரத்திற்கு விரைவில் தீர்வுக் காணப்படும்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான  அ. சிவநேசன் இதனை கூறினார்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டதை ஆலய நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கோலங்சார் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக திகழும் ஸ்ரீ கணேசர் ஆலயம், திரிசூல மகா மாரியம்மன் ஆலயங்களை நிர்வகித்து வருவதுடன், அங்குள்ள இந்து மயானத்தையும் பராமரித்து  வருகிறது.

அதன் நிர்வாகம் குறிப்பிட்ட நாட்களுக்குள் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு கணக்கறிக்கை உட்பட இதர விவரங்களை அனுப்பாத காரணத்தினால் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நாட்களுக்குள்  கணக்கு அறிக்கைகள்  ஏன்  ஆர்.ஓ. எஸ்சுக்கு  அனுப்பவில்லை என்று  காரணங்கள் தெரிவிக்கப்பட்டது அதற்கு ஆர்.ஓ.எஸ்சிடமிருந்து  பதில் கிடைக்கவில்லை என்ற விளக்கத்தை இன்று  தமது அலுவலகத்தில்  கோலகங்சார் சைவ பரிபாலன சபா பொறுப்பாளர்கள் சந்தித்தபோது தெரிவித்ததாக சிவதேசன் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து விவரங்கள் அறிய ஆர். ஓ. எஸ். அதிகாரிகளிடமும் 
 கோலகங்சார் சைவ பரிபாலன சபா பொறுப்பாளர்களிடமும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் அவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பதிவு ரத்து செய்யப்பட்டதால் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் திரிசூல மகா மாரியம்மன்  ஆலய கட்டுமாணப்பணி தடையின்றி தொடர இந்த சந்திப்பில்  பேசப்பட்ட தகவலையும் சிவநேசன் விளக்கம் அளித்தார்.

மேலும் பேசிய அவர் , சங்கங்கள், ஆலயங்களை நிர்வகி்க்கும் பொறுப்பாளர்கள் முறையே அதன் ஆண்டுக் கூட்டங்களை நடத்தவேண்டும்  முறையான கணக்குகளை வைத்திருப்பதுடன் அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆர்.ஓ. எஸ்.க்கு அனுப்ப வேண்டும்

அதன் வழி பதிவுகளை ரத்து செய்வதிலிருந்து தவிர்க்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset