நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங் 

பெட்டாலிங்ஜெயா:

பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்னவென்று தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கேள்வி எழுப்பினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவரின் கல்வி தேர்ச்சி பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது யூபிஎஸ்ஆர் தேர்ச்சி சான்றிதழை பாங் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மிகச் சிறந்த தேர்ச்சியை பெற்றுள்ளார். இதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

ஆனால் அவரின் கல்வி தேர்ச்சி பற்றி எதிர்க்கட்சிக்கு முக்கியம் அல்ல.

மாறாக அவர் சீனப்பள்ளியில் படித்திருந்தால் அதை வைத்து அரசியல் நடத்துவது தான் அவர்களின் நோக்கம்.

பாங் தாய்மொழிப் பள்ளியில் பயின்றால் என்ன தவறு.

தாய்மொழிப் பள்ளியில் பயில்வது தனிப்பட்ட உரிமையாகும். இதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம்.

குறிப்பாக இனவாதம், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றை விட்டு மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் ஊடகங்களுடனான சந்திப்பில் துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset