நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான டிக்கெட்டுகளில் பெயர் திருத்தத்திற்கு கட்டணம் விதிப்பது இயல்பான நடைமுறையாகும்: மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் 

பெட்டாலிங் ஜெயா: 

பயண டிக்கெட்டுகளில்  பெயர் திருத்தங்களுக்கு விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பது பொதுவான நடைமுறை என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் விமானப் போக்குவரத்து ஆணையம் தவறிவிட்டது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஜாய்ட் இப்ராஹிம் விமர்சித்ததைத் தொடர்ந்து மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் தனது பயண டிக்கெட்டில்  பெயர் திருத்தங்களுக்காக 50 வெள்ளி வசூலிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 

போதுமான அடையாள விவரங்களை வழங்கிய போதிலும், தனது முன்பதிவு விவரங்களில் பிழைகள் ஏற்பட்டதற்காக அவருக்கு 50 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறினார். 

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் ஒவ்வொரு விமான நிறுவனமும் சிறிய அல்லது பெரிய மாற்றங்களின் அடிப்படையில் பெயர் மாற்றங்களுக்கு அதன் சொந்த கொள்கையைக் கொண்டுள்ளது.

இது பயணிகளின் தகவல் மற்றும் அடையாளத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

இது ஒரு சுமூகமான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய வணிக நடைமுறையாகும் என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

பொதுவாக, மலேசிய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பெயர் மாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. 

இருப்பினும், சில விமான நிறுவனங்கள் சிறிய எழுத்துப் பிழைகளுக்கு கட்டணம் விதிப்பதில்லை. 

விமானத்தில் ஏறும் முன், பெயர், அடையாளம், விசா, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் போன்ற பயணிகளின் விவரங்களின் துல்லியத்தை உறுதிப்படுத்துவது விமான நிறுவனங்களின் பொறுப்பு என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதன் பின்னர், விமான நிறுவனங்கள் தங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் பெயர் மாற்றம் தொடர்பான கட்டணங்கள் குறித்துப் பயணிகளுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு முன் பயணிகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாக படிக்குமாறு விமானப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

விமானத்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, பயணிகள் சரியான தகவலை விமான நிறுவனத்திற்கு வழங்குவதும் அவசியம் என்றது. 

விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெற 90 நாட்கள் எடுத்துக் கொள்வது தாமதம் என்றும் ஜாய்ட் இப்ராஹிம் குற்றம் சாட்டினார். 

மலேசிய விமானப் போக்குவரத்து நுகர்வோர் பாதுகாப்புக் குறியீடு 2016-இன் கீழ், 30 நாட்களுக்குள் டிக்கெட்டின் முழுச் செலவையும் திரும்பப் பெறுவதற்குப் பயணிகளுக்கு உரிமை உண்டு என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. 

மேலும், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் சேவையின் மூலம் பயணிகள் தங்கள் இறுதி இலக்கை மாற்ற உரிமை உண்டு.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset