நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலம் முழுவதும் அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்: மாட் சாபு

புத்ராஜெயா:

விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்கள் மூலம் மலேசியாவின் முக்கிய உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, நோன்பு பெருநாள் காலம் முழுவதும் போதிய அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பதை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

குறைந்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட உணவுப் பொருட்களின் விநியோகங்கள் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகின்றன என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்துள்ளார். 

தேசிய விவசாய உணவுக் கொள்கை 2021-2030-ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு முக்கிய உணவுப் பொருட்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி, கோழி, முட்டை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியப் பொருட்களின் இருப்பை அமைச்சு உறுதி செய்யும். 

ஃபாமா, விவசாயிகள் கழகம் (எல்பிபி) மற்றும் மலேசியா மீன்வள மேம்பாட்டு ஆணையம் (எல்கேஐஎம்) ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதுமுள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் இந்த முக்கிய உணவுப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் ஆதரிக்கப்படும்.

அதே நேரத்தில், குறிப்பாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும் போது, உணவு வீணாக்கப்படுவதைத் தவிர்க்க உணவு பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்துவதை அமைச்சு ஊக்குவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset