நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் ஆதி. குமணன் நினைவு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்விழா வரும் மே 1 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் மலேசியப் பைந்தமிழ்க் கழகமும் இவ்விழாவில் இணை ஆதரவாளர்களாக உள்ளனர்.

இந்நிகழ்வு தாமரை குழுமத்தின் இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதே வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் சிறப்புரையாற்றவுள்ளார்.

ஆகவே சுற்று வட்டாரத்தில் தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்துக் கொள்ள ஏற்பாட்டுக் குழுவின் அழைக்கின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset