நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை:  178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்

புத்ராஜெயா:

மலேசியக் கடல்சார் அமலாக்கத் துறை மார்ச் 12-ஆம் தேதி தொடங்கி நாளை முடிவடையும் ஓப்ஸ் பகார் லாவுட் சிறப்பு சோதனை நடவடிக்கையில் 15 மில்லியன் வெள்ளி பறிமுதல் செய்துள்ள நிலையில் 178 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

நாட்டின் இறையாண்மை காக்கப்படுவதை உறுதி செய்வதற்காகப் பண்டிகைக் காலங்களில் மலேசியக் கடல்சார் அமலாக்க உறுப்பினர் செய்த தியாகத்தின் முக்கியத்துவத்தை இந்த வெற்றி நிரூபித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

கடந்த ரமலான் மாதத்தில் மலாக்காவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்பார்வையிட தமக்கு வாய்ப்பு வழங்கிய மலேசியக் கடல்சார் அமலாக்கத் துறைக்கு அமைச்சர் நன்றி கூறினார். 

மலேசியக் கடல்சார் அமலாக்கத் துறை தனது உறுப்பினர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து மலேசியாவிற்கு வழங்கப்படும் இரண்டு அமெரிக்கக் கடலோர காவல்படை கடல் ரோந்து கப்பல்களை அமெரிக்கா வழங்கிய சலுகையும் இதில் அடங்கும்.

கடல்சார் அமலாக்கத் துறைக்கு மலேசியா மேலும் நான்கு ஹெலிகாப்டர்களைச் சேர்க்கும். 

இதற்காக 600 மில்லியன் செலவாகும். இது ஏற்கனவே அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset