நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு

ஷா ஆலம்:

உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

உலு சிலாங்கூரில் உள்ள லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நிகல் கார்டென், லாடாங் மின்யாக், லாடாங் புக்கிட் திங்கி  தோட்டத்தினர் கொடுத்த நேர்காணலைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

இந்த 5 தோட்டப்புற மக்களும் குடியிருப்பு வசதியின்றி கஷ்டபடுகின்றனர் என்பதினை பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினரின் நுருல் ஷஸ்வானி மூலம் தெரிந்துக் கொண்டேன். 

இதனை தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகத்திற்கும் மாநில, மத்திய அமைச்சுக்கும், அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் ஒரு சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.

அச் சந்திப்பு கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி  எனது சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதில் பல கட்சிகளை சார்ந்த பிரநிதிகளும் தோட்டப்புற மக்களின் பிரநிதிகளும் வந்து என்னோடு கலந்து பேசினார்கள். 

இருப்பினும், இக்கலந்துரையாடலை தோட்டப்புற பிரதிநிகளுடன் மட்டுமே நான் மேற்கொண்டேன். 

என்னை எதிர்த்து அவதூறான காணொலிகள் வெளிவருவதைக் கேள்விப்படும் போது  நான் வேதனை அடைந்தேன். 

இந்நாட்டின் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு வருங்கால தூணாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். 

மேலும், வீடமைப்பு ஊராட்சி அமைச்சுக்கு சமீபத்திய நிலை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்த தொடர் நடவடிக்கையை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். 

தொடர்ந்து, பெர்ஜாயா வீடமைப்பு மேம்பாட்டாளர் இத் தோட்டப்புற மக்களுக்கு 20 ஏக்கர் நிலம் தருவதாக கூறியுள்ளனர். 

இவ்வேளையில், பெர்ஜயா வீடமைப்பு மேம்பாட்டாளருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் இந்த பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset