நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையால் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூரில் திடீர் வெள்ளம்

ஷாஆலம்:

கனமழையால் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களிலும் 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்ப்பட்டுள்ளன.

மலாக்கா அலோர் காஜாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 51 பேர் வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

இதனை மலாக்கா பேரிடர் நிர்வாக பிரிவைச் சேர்ந்த கமாருல்ஷா முஸ்லிம் கூறினார்.

சிலாங்கூரில் சுங்கைபூலோ, சுபாங் வட்டாரத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் மெர்போக் செம்பாக், டேசா கோல்பீல்டு ஆகிய இடங்களில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் தங்கியுள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சன் பெர்மாத்தாங் பாசிரில் ஒரு நிவாரண மையம் திறக்கப்ப்பட்டுள்ளது.

இதில் 46 பேர் தங்கியுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் பேரிடர் நிர்வாக குழு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset