நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சன் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல

சிரம்பான்:

போர்ட்டிக்சன் இருந்து வரும் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.

நெகிரி செம்பிலானின் மீன்வளத் துறை இயக்குநர் காசிம் தாவே இதனை தெரிவித்தார்.

போர்ட்டிக்சனில் கிடைக்கும் மஸ்ஸல்கல் தண்ணீரின் இரண்டாவது மாதிரியின் ஆய்வை கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பாதுகாப்பான உட்கொள்ளும் வரம்பிற்கு மேல் பயோடாக்சின்களை இன்னும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.

மூன்றாவது மாதிரி இன்று எடுக்கப்பட்டது. முடிவுகள் இந்த வெள்ளிக்கிழமை கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து இந்த மஸ்ஸக்கள் சாப்பிட பாதுகாப்பானதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset