நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது: ஐஜிபி

கோலாலம்பூர்:

கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.

இதனை தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மனைவிக்கு வைத்த துப்பாக்கி குறி மெய்காப்பாளரை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்புடைய 38 வயதுடைய ஹஃபிசுல் ஹவாரியை தேடும் பணியை போலீசார் முடக்கி விட்டிருந்தனர்.

இந்நிலையில் அவ்வாடவர் கோத்தா பாருவில் மாலை 3 மணிக்கு போலீசார் கைது செய்யப்பட்டார்.

இதனை உறுதிப்படுத்திய டான்ஶ்ரீ   ரஸாருடின் இது தொடர்பில் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset