நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் 75 இளைஞர்கள் பங்கேற்பு

ரவாங்:

டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 75 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

சிலாங்கூர் பெர்கெராக் செபாயா இயக்கம், மஇகா தேசிய, சிலாங்கூர் இளைஞர் பகுதியில் விளையாட்டுப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த மலையேறும் நடவடிக்கையை இளைஞர்கள் மேற்கொண்டனர்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கினார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் வரும் ஆண்டுகளில் இந்த மலையேறும் நடவடிக்கைகள் தொடரும் என்று சங்கத்தின் தலைவர் ஜி. விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில தலைவர் சுந்தர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset