நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டது; சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது: ஐஜிபி

கோலாலம்பூர்:

ஜம்ரி வினோத்தை கடந்த செவ்வாய்க்கிழமை கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நடவடிக்கை, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலித் இஸ்மாயில் இவ்வாறு விளக்கினார்.

ஜம்ரியின் ஆரம்பகட்ட கைது, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505-இன் கீழான ஒரு வழக்கை உள்ளடக்கியது.

மேலும் வேறுபட்ட நடைமுறை நடவடிக்கைகளைக் கோரும் தேசத்துரோகச் சட்டத்தின் கீழும் அவர் விசாரிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

நாங்கள் இதற்கு முன்பு கைது செய்த குற்றங்கள் வேறுபட்டவை. சில பிணை வழங்கக்கூடியவை, சில பிணை வழங்க முடியாதவை.

குறிப்பாக, புத்ராஜயாவில் தண்டனைச் சட்டத்தின் 505ஆவது பிரிவின் கீழ் நான்கு வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட கைது நடவடிக்கைகளில் இது தெளிவாகத் தெரிந்தது.

அதே நேரத்தில், தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் வேறுபட்ட நடைமுறை நடவடிக்கைகளைக் கோரும் வழக்குகளும் உள்ளன என்று அவர் இன்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

நடவடிக்கைகளில் உள்ள இந்த வேறுபாடு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால் அனைத்து செயல்முறைகளும் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படுகின்றன.

இது நாட்டின் சட்ட அமைப்பில் ஒரு பொதுவான நடைமுறை என்பதற்கும் இது உறுதியளிக்கிறது என்று முகமது காலித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset