நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தரை போக்குவரத்து சுற்றுலாத் துறையைக் காப்பாற்ற இலக்கிடப்பட்ட டீசல் மானியங்களை அரசு வழங்க வேண்டும்: மஹாடி

ஜார்ஜ்டவுன்:

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வால் இத்துறைக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தரை போக்குவரத்து சுற்றுலா நடத்துனர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்களை வழங்க அரசு ஆராய வேண்டும்.

பினாங்கு பூமிபுத்ரா சுற்றுலா முகவர் சங்கத்தின் (பென்பூமி) தலைவர்  மஹாடி இசாடி மஹராசி வலியுறுத்தினார்.

டீசல் விலை உயர்வானது சுற்றுலாப் பேருந்து, சுற்றுலா வேன் நடத்துனர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடச் செயல்பாடுகள், தொகுப்பு விலைகள், நாட்டின் சுற்றுலாத் துறையின் போட்டித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சுற்றுலாப் பேருந்துகள், வேன்களை இயக்கும் உரிமம் பெற்ற சுற்றுலா நிறுவனங்களுக்கு, அரசாங்கம், குறிப்பாக சுற்றுலா அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சு, டீசல் மானியங்களை வழங்க வேண்டும்.

நடத்துனர்களின் செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், சுற்றுலாத் தொகுப்பு விலைகளின் உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும், சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மலேசியாவின் போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் கூறினார்.

மானியங்கள் மூலமான அரசாங்கத்தின் ஆதரவானது, தொழில் துறையினருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் முழுவதிலும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தரை போக்குவரத்து சுற்றுலாத் துறை தற்போது அழுத்தத்தில் உள்ளது. அங்கு டீசல் மானியங்கள் ஒரு விருப்பத் தேர்வே தவிர, அவசியமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset