நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய், இந்திய அரசு சாரா இயக்கங்கள் இடையிலான சந்திப்பு; உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முதிர்ச்சியான நடவடிக்கை: ஐஜிபி

கோலாலம்பூர்:

மலாய், இந்திய அரசு சாரா இயக்கங்கள் இடையிலான சந்திப்பு உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முதிர்ச்சியான நடவடிக்கையாகும்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமத் காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.

நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஹார்மோனி மடானி நிகழ்ச்சியை, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதில் ஒரு முதிர்ச்சியான நடவடிக்கையாகும்.

புத்ராஜயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் மலாய், இந்திய சமூகங்களைச் சேர்ந்த பல அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு, குறிப்பாக அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினையில் சமீபத்தில் ஏற்பட்ட இனப் பதட்டங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூடிய ஒரு முயற்சி.

சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பையும் தேசிய ஒற்றுமை உணர்வையும் போலிஸ் பெரிதும் பாராட்டுகிறது.

இது, தேசிய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இனங்களிடையே நல்லிணக்கத்தைப் பேண அதிகாரிகளுக்கு மறைமுகமாக உதவுகிறது என்று அவர் இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இரு சமூகங்களின் பிரதிநிதிகளும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து, கைகுலுக்கி, கட்டித்தழுவி, கடந்தகால சம்பவங்களை மறந்து முன்னோக்கிச் செல்ல விருப்பம் காட்டியதால், கூட்டத்தின் முடிவுகள் மிகவும் சாதகமாக இருந்தன.

தனிப்பட்ட ஆதாயத்திற்காக இன, மதப் பிரச்சினைகளைத் தூண்ட முயற்சிக்கும் எந்தவொரு தனிநபர் அல்லது குழுவிற்கும் அவர் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset