நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலைமை மோசமானால் ஜோர்டானிலுள்ள மாணவர்கள் மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்: கிளந்தான் மாநில அரசு

கோத்தா பாரு: 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தால் ஜோர்டானில் பயிலும் கிளந்தான் மாணவர்களை மாநில அரசு தாயகம் அழைத்து வரத் திட்டமிட்டுள்ளது. 

இதுவரை ஜோர்டனில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி, பசுமைத் தொழில்நுட்பம், இலக்கவியல் மற்றும் புத்தாக்கக் குழுவின் தலைவர் வான் ரோஸ்லான் வான் ஹாமாட் கூறினார்.

அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகத்துடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள மாணவர்கள் விதிகளுக்கு உட்பட்டுப் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் மாணவர்களின் அவ்வப்போது நிலை குறித்து அறிந்து கொள்ளப்படும். 

கிளந்தானைச் சேர்ந்த மொத்தம் 267 மாணவர்கள் ஜோர்டானில் ஆறு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர். 

மாணவர்களின் அண்மைய நிலவரங்களைக் கண்டறிய மாநில அரசு தொடர்ந்து விஸ்மா புத்ராவுடன் தொடர்பில் இருக்கும் என்று  அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset