நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மகளிர் தொழில் முனைவர்களின் எதிர்காலத்திற்கான  உத்தரவாதத்தை அமானா இக்தியாரின் பெண் திட்டம் வழங்குகிறது: ஹேமலா ஏபி சிவம்

கோலாலம்பூர் -
இந்திய மகளிர் தொழில் முனைவர்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தை அமானா இக்தியாரின் பெண் திட்டம் வழங்குகிறது.

மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவி  ஜேமலா ஏபி சிவம் இதனை தெரிவித்தார்.

அமானா இந்தியாரின் பெண் திட்டம் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி பல ஆண்டுகளாக மலேசிய இந்திய மகளிர் தொழில்முனைவோர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் புதிய வெளிச்சத்தை தந்துள்ளது.

அதன் அடிப்படையில் இத்திட்டத்தை அறிமுகம் செய்த தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு மைக்கி மகளிர் பிரிவு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல பெண்களுக்கு தங்களின் வணிகத்தை முன்னேற்றுவதற்கு ஆதரவு, வழிகாட்டுதல், குறிப்பாக நிதி தேவைப்படுகிறது.

பலர் தங்களின் வணிகத்தை ஒரு சிறந்த நிலைக்கு வலுவூட்டுவதுடன் முன்னேற்ற வேன்டும் என விரும்புகின்றனர்.

அப்படிப்பட்ட தொழில்முனைவர்களுக்கு இந்த 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி பெரும் பயனாக இருக்கும்.

மேலும் இந்த நாட்டில் உள்ள இந்திய  மகளிர் தொழில்முனைவோரின் எதிர்காலத்தை மிகவும் பாதுகாப்பான நிலைக்கு இந்த பெண் திட்டம் உயர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாக ஹேமலா கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் அதிக பெண்கள் தொழில்முனைவர்களாக உருவாக முடியும்.

இந்த பெண் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்.

நாடு முழுவதும் உள்ள 124 அமானா இக்தியாரின் அலுவலகங்களுக்கு சென்ற இத்திட்டம் குறித்து மேல்விவரங்களை பெறலாம்.

ஆகவே இந்த வாய்ப்பை இந்திய பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹேமலா வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset