நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஏற்படும் பதற்றதைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்படும் போரை நிறுத்துவதோடு பகைமை போக்கை நீக்கவும் அனைத்துத் தரப்பினரும் சமூகத்தின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். 

ஈரான் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைத் தொடர்ந்து நிரந்தரத் தீர்வை உறுதி செய்வதற்கு அங்கு நிகழ்ந்து வரும் வன்செயல்கள் முடிவுக்கு வரப்பட வேண்டும் பிரதமர் வலியுறுத்தினார்.

மோதலை உடனடியாக நிறுத்தாவிட்டால் தீர்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாதையும் நிலையானதாக இருக்காது.

நிலைமை எதுவாயினும், இந்தப் பயங்கரமான சூழலில் தொடர்ந்து பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா எப்போதும் துணை நிற்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும், உலக நாடுகள்  அனைத்து தரப்பினரின் விரோதப் போக்கை நிறுத்தக் கோர வேண்டும் என்று அவர் தனது முகநூல்  பதிவில் கூறினார்.

சிரியாவின் டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக  ஈரானின் இந்தத் தாக்குதல்   அமைந்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். இஸ்ரேலின் இத்தகைய  நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டங்களை மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset