நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமானா இக்தியாரில் 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு; இந்தியப் பெண்களுக்கு பயனளிக்கும்: ராஜன் முனுசாமி

செமினி:

அமானா இக்தியாரில் பெண் திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரிங்கிட் இந்தியப் பெண்களுக்கு பெரும் பயனையளிக்கும்.

சிலாங்கூர் வேஃப் எனப்படும் சிலாங்கூர் மாநில சமூகநல மற்றும் தொண்டூழிய மேமபாட்டு இயக்கத்தின் ஆலோசகர் ராஜன் முனுசாமி இதனை தெரிவித்தார்.

இந்தியப் பெண்கள் பொருளாதார ரீதியில் வலுப் பெற வேண்டும் என்ற நோக்கில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இந்த பெண் திட்டத்தை அறிவித்தார்.

குறிப்பாக இத்திட்டத்திற்கு கூடுதலாக 5 கோடி வெள்ளியை டத்தோ ரமணன் அறிவித்துளார். இந்நிதியின் வாயிலாக கடனுதவி நிச்சயம் இந்தியப் பெண்களுக்கு பயனாக இருக்கும். இந்த வாய்ப்பை அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வேளையில் இந்நிதியை அறிவித்த டத்தோ ரமணனுக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் எனது நன்றி.

செமினியில் சித்திரைப் புத்தாண்டையொட்டி சிலாங்கூர் வேஃப்  இயக்கம் தனது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களைச்  சேர்ந்த  150 பெண்களுக்கு சேலைகள்  மற்றும் இனிப்பு பொருட்களை வழங்கியது.

இந்த நிகழ்வில் பேசிய ராஜன் முனுசாமி மேற்கண்டவாறு கூறினார்.

விஷ்ணு தேவ்வை தலைவராகக் கொண்ட  இவ்வியக்கம்  இதுபோன்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி  வருகிறது.

வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் செமினி வாழ் மகளிர்  அமானா இக்தியார், தெக்குன் போன்றவற்றோடு மாநில அரசாங்கத்தின்  ஐசிட்,  சித்தம் உள்ளிட்ட  அனைத்து உதவி திட்ட வாய்ப்புகளையும்  நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி   அவர் கேட்டுக் கொண்டார்.

செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ஜூனன், சந்திரன் ராமசாமி ஆகிய இருவரோடு  செமினி கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset