நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல்; நிதி சந்தைகளில் மலேசியாவின் தாக்கத்தை அரசு கண்காணிக்கிறது: பிரதமர்

புத்ராஜெயா:

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் முன்னேற்றங்களை அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருகிறது.

நிதிச் சந்தையின் நிலை, அதனால் மலேசியாவில் ஏற்படும் தாக்கத்தையும் அரசாங்கம் கண்காணித்து வருவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதார, நிதி நிலையை வலுப்படுத்த அரசாங்கம் புத்திசாலித்தனமாக செயற்படும். 

மலேசியர்களைப் பாதிக்கக்கூடிய காரணங்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி உட்பட பல அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset