நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டிகைகள் மலேசியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன: டத்தோ ஆரோன் அகோ டகாங்

கோலாலம்பூர்:

மலேசியாவில் இந்த வாரம் கொண்டாடப்பட்ட ஆறு பண்டிகைகளும் நாட்டின் பன்முகத்தன்மையைக் காட்டியுள்ளன என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறினார்.

இந்நாட்டில் பல இனங்கள், கலாச்சாரங்கள், மத நம்பிக்கைகளின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை மக்களால் பாதுகாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சொத்துக்கள் என்று அவர் தெரிவித்தார். 

இந்த வாரம் மட்டும் நோன்பு பெருநாள், உகாதி, சித்திரைப் புத்தாண்டு, வைசாகி, விஷு மற்றும் சோங்க்ரான் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

பல்வேறு பின்னணியில் உள்ளவர்கள் அந்தந்த பண்டிகைகளைக் கொண்டாடும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset