நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை தத்துவங்கள் மலேசியர்களை சென்றடைய வேண்டும்: பிரதமர்

ஷாஆலம்:

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை தத்துவங்கள் அனைத்து மலேசியர்களையும் சென்றடைய வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியை ஆயுதமாக கொண்டு இந்தியாவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருமை கொண்டுள்ள டாக்டர் அம்பேத்கர் பலருக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

நான் சிறையில் இருந்த போது அவரின் புத்தகங்களை படித்துள்ளேன். அவரின் போராட்டங்கள் சாதனைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக அவரும் எனக்கு ஒரு முன்னோடி தான்.

அவரை நினைவு கூரும் வருகையில் ஆண்டுக்கு ஒரு முறை மாநாடும் பிறந்த நாளும் கொண்டாடினால் மட்டும் போதாது.

அவரின் வாழ்க்கை தத்துவங்களையும் போராட்டங்களையும் இந்தியர்களை தவிர்த்து அனைத்து மலேசியர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பல உரிமை போராட்டங்களை நடத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் பாணியை இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்.

சண்டை போடுவதற்கும் கூச்சல் போடுவதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் மட்டும் நாடாளுமன்றம் இருக்கக் கூடாது.

ஆக்கபூர்வமான விவாதங்கள், மக்களின் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள், உரிமையை நிலைநாட்டும் தளமாகவும் நாடாளுமன்றம் இருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் ஐந்தாவது மாநாடு, 133 ஆவது டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset