நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 5 வயது சிறுமி: கோவாவில் கொடூர சம்பவம்

கோவா:

கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோவில் கட்டுமானத் தளத்தில் 5 வயது சிறுமி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். 

காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறுமி யார் என்று அடையாளம் காணப்படாத நிலையில், தெற்கு கோவா பகுதியின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset