நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 லட்சம் ரிங்கிட் கொண்ட பயணப் பெட்டி தொடர்பான விசாரணை: அடுத்த வாரம் மூவரும் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள்

 

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பணம் இருந்த பயணப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் மூன்று நபர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிப்பார்கள்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், அந்த மூவரும் சம்பந்தப்பட்ட சாமான்கள் அவனுடையது என்று மரக்கட்டை தொழிற்சாலையின் இயக்குனரின் நண்பர்களாக இருந்த சாட்சிகள் என்று கூறினார்.

அம்மூவரின் வாக்குமூலம் பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்தில் பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் 30-ஆம் தேதி கடந்த ஆண்டு முதலீடு செய்வதற்காக கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற விரும்பிய அவரது நண்பரின் வீட்டிலிருந்து பணப் பெட்டி எடுத்து வரப்பட்டதாகக் கூறிய அத்தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். 

இருப்பினும், சாட்சியமளிக்கும் போது தனிநபர் தனது நிறுவனத்திற்கு சொந்தமான பணம் தொடர்பான எந்தப் பதிவுகளையும் ஆதாரங்களையும் கொண்டு வரவில்லை.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset