நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத் தலைவர் பொறுப்பை தற்காப்பேன்: நிவாஸ் ராகவன்

பெட்டாலிங்ஜெயா:

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத் தலைவர் பொறுப்பை தற்காப்பேன் என்று அதன் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த வர்த்தக சங்கமாக கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் விளங்குகிறது.

இந்த சங்கத்தின் 96ஆவது ஆண்டுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டுக் கூட்டம் சூடிப்பிடித்துள்ளது.

குறிப்பாக வரும் ஏப்ரல் 18ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தலும் நடைபெவுள்ளது.

இந்நிலையில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதாக நிவாஸ் ராகவன் அறிவித்தார்.

அதே வேளையில் எனது அணியின் துணைத் தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடுவார் என அவர் அறிவித்தார்.

கடந்த தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியில் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.

தலைவராக பொறுப்பேற்றது முதல் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன்.

குறிப்பாக இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கிய அந்நியத்  தொழிலாளர் நெருக்கடி பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டது.

இருந்தாலும் ஒரு சில பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

வரும் தேர்தலில் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இந்தப் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

அதே வேளையில் அரசாங்கத்தின் நிதியுதவிகள் இந்திய வணிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக இந்திய சமுதாயத்தில் அதிகமான வணிகர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

இப்படி பல திட்டங்களையும் இலக்குகளையும் நான் கொண்டுள்ளேன்.

அதே வேளையில் வரும் வேட்புமனு தாக்கலுக்கு முன் என் தலைமையில் போட்டியிடும் அணியை அறிவிப்பேன்.

வர்த்தக சங்க உறுப்பினர்கள் எனது தலைமையிலான அணிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று நிவாஸ் ராகவன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset